தமிழ் மக்களின் கோரிக்கைளை யார் ஏற்கிறாரோ அவருடன் கூட்டுசேருவேன் !! விக்னேஸ்வரன் அறிவிப்பு

Report Print Varun in அரசியல்

பயங்கரவத தடைச்சட்டத்தை நீக்குவதையே தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கவுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அடுத்துவரும் தேர்தல்களில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினர் விலக வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், பொது மக்களின் காணிகள் விடுவித்து அவர்களின் நிம்மதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்த வேண்டும்.

அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் முதலானவற்றையே அடுத்துவரும் பொதுத் தேர்தலில் தேர்தல் விஞ்ஞானக் கொள்கையாக இருக்கும்.

இதற்கு யார் உடன்படுகிறார்களோ அவர்களுடன் மாத்திரமே கூட்டணி வைத்துக்கொள்வேன் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.