நாடாளுமன்றத்திற்கு சென்று வெறுமனே கதிரைகளை அலங்கரித்து விட்டு வரும் கூட்டமைப்பு! கருணா குற்றச்சாட்டு

Report Print Varunan in அரசியல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பலத்தை மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் தான் பயன்படுத்த வேண்டுமே தவிர வெறுமனே நாடாளுமன்றத்தில் சென்று அங்கிருக்கும் கதிரைகளை அலங்கரித்து விட்டு வருவதற்காக அல்ல என முன்னாள் பிரதியமைச்ச விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் அன்னமலை 2இல் அமைந்துள்ள வேப்பையடி ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று வைத்தியபொறுப்பதிகாரி டாக்டர் சித்தி ஜாயிஷா அனீஸ் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில் பல காலமாக பல அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் செயற்பாடு இல்லாத நிலையில் தான் அம்பாறை மாவட்டம் காணப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தில் கூடுதலாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கூடுதலாக நேரத்தை செலவழித்து வருகிறது. எதற்காக என்றால் அம்பாறை மாவட்டத்தில் பல காலமாக பல அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் செயற்பாடு இல்லாத நிலையில்தான் அம்பாறை மாவட்டம் காணப்படுகிறது.

அதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அந்த மக்களின் தேவைகளை பூர்த்தி ஆகவேண்டும் என்ற அடிப்படையில் தான் நாம் இறங்கி இருக்கின்றோம். அதன் தொடராக அனைத்து தமிழ் பிரதேசங்களுக்கும் சென்று பல கூட்டங்களில் மக்கள் சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது காலகாலமாக மக்களை ஏமாற்றுகின்ற ஒரு கட்சி அவர்கள் மக்களுக்கு எந்தவொரு அபிவிருத்தி பணியை மேற்கொள்ளவில்லை. ஒரு வேலைவாய்ப்பு கூட பெற்று கொடுக்கவில்லை.

அரசியல் பலத்தை மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் தான் ஏன் பயன்படுத்த வேண்டுமே தவிர வெறுமனே நாடாளுமன்றத்தில் சென்று அங்கிருக்கும் கதிரைகளை அலங்கரித்து விட்டு வருவதற்காக அல்ல.

மக்களின் தேவைகளையும் மக்களின் குறை நிறைகளை அறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான வினைத்திறனுடன் செயற்பட தான் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்.

தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிப்பாடு தான் இன்று நாம் குடி தண்ணீர் இல்லாமல் இருப்பதும், குளங்கள் ஏரிகள், தூர்வாரப்படாமல் இருப்பதும், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமைக்கு காரணம்.

ஏனென்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சின்னாபின்னமாக இப்போது உடைந்துள்ளது. அவர்களுக்குள் போட்டிகளும், பொறாமைகளும் பிரிவுகளும் வளர்ந்துள்ளது. அவர்களே தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவர்க்களால் மக்களுக்கு எந்தவித பிரயோசனமும் இல்லை.

இழப்புக்களை காப்பாற்ற வேண்டுமென்றால் அரசின் அதிகாரம் நமக்கு வேண்டும். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு சமூகமாக நாம் மாற்றம் பெற வேண்டும். அந்த அடிப்படையில், தான் நாம் பல வேலைத் திட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து வருகின்றோம்.

இந்த அரசாங்கம் 20 வருடத்திற்கு மேல் நீடிக்கும் அரசாங்கத்தை பயன்படுத்தி சமூகமாக மாற்றம் பெற வேண்டும். காலாட்டிக் கொண்டு வெற்றி பெறுவதென்பது முடியாது.

அம்பாறையில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். எந்தவித முன்னேற்றமும் நடைபெறவில்லை. முஸ்லிம் சமூகத்தை நாம் பாராட்ட வேண்டும்.

அவர்கள் இருந்த அரசாங்கத்தை நன்றாக பயன்படுத்துவார்கள். அவர்கள் அரசோடு இருந்து கொண்டு வளங்களை பெற்று தங்கள் சமூகத்தை வளர்த்துக் கொண்டார்கள். அவர்களைப் பார்த்து நான் பொறாமை படுவது அர்த்தமில்லை.

நம் தலைமைகள் அரசாங்கத்தை பயன்படுத்த தவறிவிட்டோம். அதை செய்வதற்காகத்தான் அம்பாறையில் இறங்கியிருக்கின்றேன்.

அம்பாறை மக்களுக்கு குடிநீருக்கு தட்டுப்பாடு இருக்கின்ற வேளை அம்பாறை பிரதேசத்தில் குளத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு குடிநீர் செல்கின்றது. அந்த குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது நான் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.