ஜனாதிபதி கோட்டாபய தொடர்பில் கருணா வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலம் 10 வருடங்களுக்கு நீடிக்கும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலம் 10 வருட காலம் நீடிக்கும் என்பது நிச்சயம்.

கடந்த அரசாங்கத்தின் போது 6000 பேருக்கு அரசியல் தேவையின் நிமித்தம் போலியான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 1330 பேருக்கு இரண்டாம் மொழி ஆசிரியர் நியமனமும், 6000 பேருக்கு அரசியல் தேவைகளுக்காக போலி நியமனமும் வழங்கப்பட்டுள்ளன.

அதற்காக அமைச்சரவையில் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை. அவ்வாறு நியமனம் பெற்ற போதிலும் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். போலியான வழங்கப்பட்ட அனைத்து நியமினங்களும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான தவறுகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சரிப்படுத்த வேண்டும் என கருணா மேலும் தெரிவித்துள்ளார்.