கோட்டாபயவின் கொள்கைப் பிரகடனம் குறித்து ஐதேகவின் நிலைப்பாடு!! வாக்கெடுக்குமாறு கோரிக்கை

Report Print Varun in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் முடிவு செய்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றம் நாளை கூடுகிறது.

இந்நிலையில் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதியின் இக்கொள்கையை மக்கள் பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை அறிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் தீர்மானம் எடுத்திருக்கின்றனர்.

இதேவேளை, இதேபோன்றதொரு தீர்மானத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவொருபுறமிருக்க, ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்படவுள்ளார். எதிர்க் கட்சிகளின் பிரதான அமைப்பாளராக கஜந்த கருணாதிலகவும் நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நாடாளுமன்ற அவைத் தலைவராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.