சஜித் நாளைய தினம் எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்பாரா?

Report Print Varun in அரசியல்

எதிர்க் கட்சித் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச பதவியேற்கவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பிக்கும் நிலையில் சஜித் பிரேமதாச எதிர் கட்சித் தலைவராக பதவியேற்பாரா இல்லையா என்பது தொடர்பில் சந்தேகங்கள் நிலவிவந்தன.

இது தொடர்பில் எமது செய்திச் சேவைக்கு தகவல் வழங்கிய அவர்,

குறித்த பதவிக்காக அவருடைய பெயர் ஏற்கனவே நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்துள்ளது. இதனை நாளைய தினம் சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் .

அதேபோல நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் போது சஜித் பிரேமதாச எதிர் கட்சித் தலைவராக பதவியேற்பார் என்று குறிப்பிட்டார்.