வடமாகாண ஆளுநரிற்கு வவுனியாவில் அமோக வரவேற்பு!

Report Print Theesan in அரசியல்

வடமாகாண ஆளுநராக பதவியேறறுள்ள பி.எஸ்.எம்.சாள்சை வரவேற்கும் நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் செ.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகர எல்லையில் வைத்து வாகன பவனியாக புதிய ஆளுநர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வவுனியா நகரசபை வாயிலில் சைவப்பிரகாச மகளீர் கல்லூரி மாணவிகளின் இசைவாத்தியம் முழங்க அழைத்து வர வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் புதிய ஆளுநரை வரேவேற்றிருந்தார்.

இதனையடுத்து பொதுஅமைப்புக்கள் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து மண்டபத்திற்கு அழைத்து வந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்புரையினை வடமாகாணத்தின் புதிய ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் நிகழ்த்தியிருந்ததோடு, இந்நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.