நாடாளுமன்றை மார்ச் மாதம் கலைக்கத் தீர்மானம்

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கலைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், மார்ச் மாதம் 01ஆம் திகதி அல்லது 4ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தை கலைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நாடாளுமன்றத்தின் நான்கரை ஆண்டு பதவிக்காலம் முடிந்ததும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் தேவையான நேரத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.

மார்ச் மாதம் முதலாம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு, அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

மார்ச் மாதம் 4ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் 27ஆம் திகதிக்கும் மே மாதம் 10ஆம் திகதிக்கு இடையில் தேர்தலை நடத்தலாம்.

தேர்தல் நடத்தப்படுவது, நாடாளுமன்றத்தை கலைப்பது ஆகிய தீர்மானங்கள், பாடசாலை விடுமுறை, வெசாக் தினம், சர்வதேச தொழிலாளர் தினம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டியது பொருத்தமானது எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.