பெறுமதியான நிலம் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு விற்பனை! ஐ.தே.கட்சி தெரிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

கொழும்பு சங்கரிலா ஹோட்டல் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு இடையில் அமைந்துள்ள பெறுமதியான மூன்றரை ஏக்கர் நிலம் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித். பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் உள்ள தனது வீட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

இந்த மூன்றரை ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய விலை மனு கோரப்பட்டதா, எப்போது கோரப்பட்டது என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

விலை மனுவை முன்வைத்த நிறுவனம் என்ன, எவ்வளவு தொகை விலை மனுவாக முன்வைக்கப்பட்டது என்பதை மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்.

நாட்டில் ஒரு அங்குலம் நிலத்தை கூட விற்பனை செய்ய போவதில்லை என ஜனாதிபதித் தேர்தலில் கூறினாலும் அது தற்போது மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.