வட மாகாணத்தின் புதிய ஆளுநர் சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு!

Report Print Sumi in அரசியல்

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

யாழ்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்துக்கு இன்று பிற்பகல் வருகை தந்த ஆளுநருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

மதத் தலைவர்களின் ஆசிகளைத் தொடர்ந்து தனது செயலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கடந்த திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

வடக்கு மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக அவர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றறுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், சர்வமதத் தலைவர்கள் மற்றும் இராணுவம், பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன் பொலிஸ் அணிவகுப்பு மரியாதைதையும் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன், தர்மலிங்கம் சித்தார்த்தன், இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், 5 மாவட்ட அரசாங்க அதிபர்கள், திணைக்கள அதிகாரிகள், உட்பட முப்படை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.