சம்மாந்துறையில் 3000 அங்கத்தவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைவு!

Report Print Varunan in அரசியல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 51 கிராம சேவகர் பிரிவிற்கான இணைப்பாளர்கள்,அங்கத்துவர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது,விவசாய அமைப்பு, இளைஞர் அமைப்பு, மகளிர் அமைப்புக்கள், சமூக சேவை அமைப்புக்கள் கலந்து கொண்டதுடன் ஒரு மணித்தியாலத்தில் 3000 அங்கத்தவர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.

சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சம்மாந்துறை தொகுதி இணைப்பாளரும் வை.எம் முஸம்மில் தலைமையில் அவரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பொதுஜன பெரமுன பிரதான அமைப்பாளர்,வனவிலங்கு வன பாதுகாப்பு ராஜங்க அமைச்சரும் விமல் வீர திஸ்ஸாநாயக்க மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.