விஜயதாச ராஜபக்சவின் திருத்தச் சட்டங்களை எதிர்க்கும் ஜே.வி.பி

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தனிப்பட்ட உறுப்பினர் யோசனையாக நாடாளுமன்றத்தில் கொண்டு வர தயாராகும் 21 மற்றும் 22ஆம் திருத்தச் சட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பிரச்சினையான இடங்களில் திருத்தங்களை செய்வதற்காக இந்த திருத்தச் சட்டங்களை கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

எனினும் இந்த புதிய திருத்தச் சட்டங்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.