சுவிஸூக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - தினேஷ் குணவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்

சுவிஸ் விசேட பிரதிநிதி மற்றும் தூதரகம் வெளியிட்ட விசேட அறிக்கை ஊடாக பெண் ஊழியர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை மிக தெளிவானது என்பது தெரியவந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருத்தரப்பு உறவுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி தொடர்பான சம்பவத்தின் ஊடாக நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சி இருப்பதாகவும் சுவிஸ் அறிக்கை மூலம் அந்த முயற்சி தடுக்கப்பட்டதுடன், சுவிஸர்லாந்து நாட்டுக்கு இலங்கை அரசின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.