ரணில் அரசாங்கம் திருட்டுதனமாக செய்ததை அம்பலப்படுத்திய அமைச்சர் விமல் வீரவன்ச!

Report Print Varun in அரசியல்

கடந்த அரசாங்கம் திருட்டுத்தனமாக இரண்டு விதமான மில்லேனியம் சவால் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதன் காரணத்தால் அந்த உடன்படிக்கையை கிழித்தெறிய முடியாமல் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருட்டுத்தனமாக கைச்சாத்திட்டிருந்தாலும் அரசாங்கம் ஒன்றே அதை கைச்சாத்திட்டுள்ளது. எனவே நாம் அனைவரும் அதற்கு கட்டுப்படவேண்டியுள்ளது.

அமைச்சர் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்;

சிறிய,நடுத்தர தொழித்துறை அமைச்சர் - கடந்த அரசாங்கம் திருட்டுத்தனமாக இரண்டு விதமான மில்லேனியம் சவால் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.

ஆட்சிமாற்றத்தின் பின்னரே அதனை நாங்கள் கண்டுபிடித்தோம். அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்படவில்லை. அதற்கடுத்த ஒப்பந்தங்களை செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டிருந்தார்கள்.

எனினும் அந்த தீர்மானத்தை நாங்கள் இரத்து செய்தோம். இதுகுறித்து நிபுணத்துவம் கொண்டுள்ள நான்கு பேரை நியமித்து, இந்த ஒப்பந்தங்கள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கடந்த அரசாங்கம் திருட்டுத்தனமாக இரண்டு ஒப்பந்தங்களை செய்துகொள்ளாமல் இருந்திருந்தால் அவற்றை மீள்பரிசீலனை செய்யாமல் இரத்து செய்திருப்போம்.

நாட்டிற்கும் திருட்டுத்தனமாக கடந்த அரசாங்கத்தினால் இரண்டு ஒப்பந்தங்களை செய்தபடியினால் ஆட்சியிலுள்ள அரசாங்கம் என்ற வகையில்தான் அந்த ஒப்பந்தங்களை மீள்பரிசிலனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஆனால் அந்த ஒப்பந்தங்களை திருட்டுத்தனமாக செய்தவர்கள் இன்று ஏன் அவற்றை புதிய அரசாங்கம் கிழித்தெறியவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள் என தெரிவித்தார்.