எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களுடன் நாடு திரும்பும் பசில் ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இந்த மாத நடுப் பகுதியில் இலங்கை திரும்ப உள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் மேற்கொண்ட அதிகமான வேலை பளு காரணமாக பசில் ராஜபக்ச விடுமுறையில் ஓய்வெடுப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

வெளிநாட்டில் இருந்தாலும் இலங்கையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்பந்தமாக தேடிப்பார்த்து வருவதாகவும் அரசியல் தீர்மானங்களின் போது அவற்றுடன் சம்பந்தப்பட்டு வருவதாகவும் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச சுகவீனமாக இருப்பதாகவும், அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக சிலர் கூறினாலும் அதில் உண்மை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பசில் ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திட்டங்களை உருவாக்கி வருவதாகவும் நாடு திரும்பியதும் அதனை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.