மகிந்த மற்றும் கோட்டாபயவுடன் தொலைபேசியில் பேசிய நரேந்திர மோடி

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியின் மூலம் நேற்றையதினம் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார்.

மலர்ந்திருக்கும் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக நரேந்திர மோடி பல நாட்டு தலைவர்களுடனும் தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார்.

இதன்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் 2020ஆம் ஆண்டில் நட்புறவுகளை மேம்படுத்துவதில் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

மேலும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையுடன் நெருக்கமான மற்றும் விரிவான ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.