நாளைய நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Varun in அரசியல்

08ஆவது நாடாளுமன்றின் நான்காவது கூட்டத்தொடரின் நாடாளுமன்ற அமர்வுகள் நாளைய தினம் சம்பிரதாய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் முகமாக முன்னெடுக்கப்படவிருந்த இராணுவ அணிவகுப்பு மரியாதைகளை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்தவகையில், நாளைய நிகழ்வுகள் அனைத்தும் எளிமையான முறையில் நடத்தப்பட வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சாதாரணமாக நாடாளுமன்ற அமர்வுகளின் போது குதிரைப்படை அணிவகுப்பு மரியாதை இடம்பெறும் அதனையும் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.