தற்பொழுது யார் தலைவராகினாலும் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடையும்!

Report Print Malar in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக யார் தெரிவுச்செய்யப்பட்டாலும் அக்கட்சி படுதோல்வியடையும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

குருநாகலில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் அண்மைய வரலாற்றில் சஜித் பிரேமதாச போன்ற தூரநோக்கு சிந்தனையற்ற தலைவரொருவர் தோன்றவில்லை.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த மறுகணம் பொது தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டியுள்ளது. அவர்களின் பிரச்சினைகளை அவர்களாகவே தீர்க்க இயலவில்லை.

எப்போது தேர்தல் நடந்தாலும் தாம் தோல்வியுறுவோம் என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். மாகாண சபை தேர்தலையும் நடத்தவில்லை. அதற்கு முன்னர் பிரதேச சபை தேர்தலை நடத்தினார்கள். அதனையும் உரிய நேரத்தில் நடத்தாது காலம் தாழ்த்தினார்கள்.

தேர்தலை காலம் தாழ்த்துவதன் ஊடாக இதிலிருந்து தப்பித்து விடலாமென நினைத்தார்கள். இறுதியில் என்ன நடந்தது ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக அழிவடைந்ததுடன் அக்கட்சிக்கு கிராமத்தில் காணப்பட்ட ஆதரவு மொட்டின் கரங்களிற்கு கைமாறியது.

மாகாண சபை தேர்தலையும் நடத்தவில்லை. தற்போதைய பொது தேர்தலில் என்ன செய்ய வேண்டும்? தாம் தேவையான ஆதரவை வழங்குவதாக அவர்கள் கூறுகின்றார்கள்.

இவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு சஜித் பிரேமதாச மூன்றில் இரண்டை மாத்திரமன்றி வேண்டியதை தருவதற்கு ஆயத்தமாக இருப்பதை நான் கண்டேன்.

எனவே, பொதுத் தேர்தலிற்கு உங்களின் ஒத்துழைப்பை தற்பொழுதே தாருங்களேன். சஜித் பிரேமதாச உள்ளடங்கலான குழுவிற்கு மன உறுதியும், முதுகெலும்பும் இருந்தால் தேர்தலொன்றை சந்திக்க தயாராகுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.