அரசியல்வாதிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்: விஜித ஹேரத்

Report Print Kamel Kamel in அரசியல்

அரசியல்வாதிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசியல்வாதிகள் உடல் மற்றும் உள ரீதியான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பெய்ர வாவிக்கு அருகாமையில் உள்ள காணியை சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு 43 மில்லியன் டொலர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணி வழங்கப்பட உள்ளதாகவும் இது குறித்த அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடந்த வாரம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.