ஐ.தே.கட்சி அனைத்து இனத்தவருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுத்தது: கபீர் ஹாசிம்

Report Print Steephen Steephen in அரசியல்

அனைத்து இனங்களையும் சேர்ந்த நபர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க இருக்கும் சந்தர்ப்பத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்த கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

உத்தேச 21 மற்றும் 22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக கேகாலையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முடிந்தளவுக்கு நாட்டில் பல்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்களை ஜனநாயக முறைக்குள் உள்ளடக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து இன மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்தது எனவும் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.