எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Report Print Ajith Ajith in அரசியல்

அமெரிக்காவின் எம்.சி.சி உடன்படிக்கை இருக்கும் நிலையிலேயே அரசாங்கம் கைச்சாத்திடாது.

மாறாக பேராசிரியர் லலிதசிறி குணருவன் தலைமையிலான நால்வர் குழு இந்த உடன்படிக்கையில் உள்ள சில அம்சங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்திருக்கவில்லை என்பதை பரிந்துரை செய்த பின்னரே உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு தருணத்திலும் அரசாங்கம் அரசியல் ரீதியான காரணங்களுக்கு அடிபணிந்து இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடாது

முன்னைய அரசாங்கம் தமது இறுதிக்காலத்தில் இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டதாகவும் ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.