இன்று ஆரம்பமாகின்றது நாடாளுமன்ற கூட்டத்தொடர்!

Report Print Murali Murali in அரசியல்

8வது பாராளுமன்றத்தின் 4 வது அமர்வு இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 70 (01) இற்கு அமைவாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதிக்கு உரிமை உண்டு.

இதற்கு அமைவாக கடந்த டிசம்பர் 2ம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. விசேட முக்கியஸ்தர்கள் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் இந்த கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பிரதாய நிகழ்வு இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் சபாநாயகர் மற்றும் பிரதமர் ஆகியோரின் வருகையும் இடம்பெறும்.

இதனைத் தொடர்ந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகையும் இடம்பெறும். ஜனாதிபதி தேசிய கொடியை ஏற்றி வைக்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்காக 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படவுள்ளன.

ஜனாதிபதி சபைக்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து சபை அமர்வு ஆரம்பமாகும். இதன்போது புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் ஜனாதிபதியால் சபையில் முன்வைக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதிக்காக தீர்க்கப்படவிருந்த 21 மரியாதை வேட்டுக்கள் மற்றும் வீதியின் இருமருங்கிலும் இடம்பெறவிருந்த இராணுவ மரியாதை ஆகிய சம்பிரதாயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.