நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு விசேட ஆசனம்! பின்வரிசைக்கு செல்லும் ரணில்

Report Print Vethu Vethu in அரசியல்

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்காக விசேட ஆசனம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஆசனம் உள்ள இடத்திலேயே ஜனாதிபதிக்கும் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற அமர்வில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு ஆசனம் ஒதுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கமைய ஜனாதிபதிக்கு விசேட ஆசனத்திற்கு மேலதிகமாக ஆளும் கட்சியின் வரிசையில் எட்டாவது ஆசனமும், பிரதமருக்கு ஏழாவது ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சபைத் தலைவராக நியமிக்கப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆறாவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சிக்கான ஆசன வரிசையில் சஜித் பிரேமதாஸவுக்கு எட்டாவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது எதிர்க்கட்சி தலைவரின் ஆசனமாகும். நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்டவுள்ளார்.

சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் ஏழாவது ஆசனம் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் ரணிலின் விசேட கோரிக்கைக்கமைய அவருக்காக ஒன்பதாவது இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.