ஜனாதிபதி தலைமையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் சற்று முன்னர் ஆரம்பம்

Report Print Vethu Vethu in அரசியல்

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை 9.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தை வந்தடைந்தார்.

இதன்போது நாடாளுமன்ற நுழைவாயிலில் வைத்து ஜனாதிபதியை சபாநாயகர் வரவேற்று அழைத்துச் சென்றார்.

முதலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரியவின் வருகையும் இடம்பெற்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்றத் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் ஜனாதிபதியை நாடாளுமன்றத் கட்டடத்தின் பிரதான படிக்கட்டு வரிசையின் அருகில் வரவேற்றனர்.

சபையின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் கோட்டை ஆனந்த பாலிகா வித்தியாலய மாணவியர் ஜயமங்கள கீதம் இசைத்தனர்.

அதனை தொடர்ந்து ஜனாதிபதியை 10 மணியளவில் நாடாளுமன்றத்திற்குள் சபாநாயகர் அழைத்து சென்றார்.

ஜனாதிபதியை வரவேற்ற சபாநாயகர், ஜனாதிபதியை உரையாற்றுமாறு பணித்தார். தற்போது ஜனாதிபதி தனது முதலாவது உரையையாற்றி வருகின்றார்.

அதற்கமைய கட்சி பேதமின்றி இலங்கை மக்களின் வறுமையை ஒழிக்க அனைவரும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.