முக்கிய பதவியொன்றிற்கு பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ள தமிழர்

Report Print Kanmani in அரசியல்

ஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் இன்று அலரி மாளிகையில் வைத்து பிரதமரால் வழங்கப்பட்டுள்ளது.

உகண்டாவை வதிவிடமாக கொண்டுள்ள வேலுப்பிள்ளை கணநாதன் உகண்டாவில் இலங்கையின் தூதுவராக கடமையாற்றும் அதேவேளை அவர் உகண்டாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர் ஸ்தானிகராவார்.

இவர் பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மற்றும் புனித ஜோசப்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.