சுவிஸ் தூதரக நிலைப்பாடு குறித்து பலகோணங்களில் சந்தேகம்!! ரஞ்சன் ராமநாயக்க

Report Print Varun in அரசியல்

நாட்டில் பல தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஆலயங்கள் இருக்கும்போதும் அனைவரும் ஏன் சுவிஸ் தூதுவராலயம் குறித்தே பேசுகிறார்கள் என்றும் அனைத்து சம்பவங்களை பார்க்கும் போது ஒன்றின் ஒன்றுக்கு தொடர்பு இருப்பதாக தாம் கருதுவதாக முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுடனான நேர்காணல் ஒன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மோட்டார் வாகன பதிவு திணைக்களத்திற்கு திடீர் விஜயமொன்றை முன்னெடுத்திருந்தார். அந்த விஜமானது சிறந்தது என்றும் அதற்கு தாம் ஜனாதிபதிக்கு தலை வணங்குவதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து இங்கு வினவிய போது தாம் ஜனனடிப்பதியை ஒருநாளும் நேரில் சந்தித்தது இல்லை என்றும் ஒருமுறை ஒரு நிகழ்வின் போது தூரத்தில் இருந்து கண்டதாகவும் அவர் தெரிவித்தார். இருந்தாலும் 62 லட்சம் மக்களின் விருப்பில் ஜனாதிபதி தெரிவு செய்யபட்டார். அவர் எமது ஜனாதிபதி. அவரின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயங்க மாட்டேன் என அவர் இங்கு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்.

ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர் பெல்லன்வில விகாரைக்கு சென்றார். அங்கே இருந்த பிரதான பிக்குவிடம் என்ன கூறினார். சுவிஸ் தூதரகம்தான் புலனாய்வுத்துறை அதிகாரி நிஷாந்த டி சில்வா சுவிஸ் நாட்டுக்கு கொண்டுசென்றுள்ளதாக தெரிவித்தார். அதற்கு சுவிஸ் அரசாங்கம் உதவியுள்ளதாக கூறினார். இவை வேறு எவரும் கூறியவை அல்ல. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே கூறினார்.

நாங்கள் இவை குறித்து கவனமாக பசர்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம். அதேபோல கடத்தப்பட்ட சம்பவம் கூட சுவிஸ் தொடர்பாகவே அமைந்துள்ளது. இவற்றை பார்க்கும் போது எதோ ஒரு தொடர்பு இருப்பதாக எனக்கோ தோன்றுகிறது.

நான் இதனை நாட்டிலுள்ள புத்திஜீவிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டில் எத்தனை தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஆலயங்கள் இருக்கின்றன. ஆனால் இவர்கள் எதற்காக சுவிஸ் தூதுவராலயம் பற்றியே பேசுகிறார்கள். அதில் எதோ உள்ளது.

நிஷாந்த செல்வதும் சுவிஸ், அவருக்கு உதவுவதும் சுவிஸ், கடத்தப்படுவதும் சுவிஸ் காரியாலய அதிகாரி. யோசித்து பாருங்கள் எங்கேயோ தொடர்பு உள்ளது.

கொழும்பில் பல இடங்களில் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. பலர் இறந்தார்கள். அதனை செய்தது பிரபாகரன் என தெரிந்திருந்தாலும் நிரூபிக்க சான்றுகள் இல்லை. அதுபோலவே தான் இந்த செயலும். செய்திருக்கிறார்கள். ஆனால் ஆதாரங்கள் இல்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஆதாரங்கள் இல்லை என நாம் கூறினாலும் எமக்கு சிந்திக்க முடியுமல்லவா. சிந்தித்தால் எமக்கே தீர்மானித்து கொள்ளலாம் என்ன நடந்து உள்ளது என்று.

இந்த சம்பவங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் மீது குற்றம் சுமத்தினால் அது ஒரு முட்டாள் தனமான செயலாகும். என் என்றால் அந்த காலக்கட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் யாரை கடத்துவார்கள் என்ற அச்சத்தில் பதுங்கி நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

தேர்தல் எப்போது நடந்தது 2019ம் ஆண்டு நவம்பர் மாதம். கடத்தல் சம்பவம் எப்போது நடந்தது அதே மாதம் 22ம் திகதி. அந்த திகதிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தத்தமது வீடுகளில் பதுங்கியிருந்தார்கள். அவர்கள் எப்படி பெண்ணை கடத்துவார்கள்? எப்படி அந்த பெண்ணின் வாயில் துப்பாக்கியை வைப்பார்கள்? அவர்கள் பயத்திலே இருந்தார்கள் தமது வாய்களில் துப்பாக்கி வைக்கப்படும் என்று.

அரச தரப்பினர் முயற்சி செய்கிறார்கள் இந்த கடத்தலை செய்தது ஐக்கிய தேசியக் கட்சியினர் என பழிபோடுவதற்கு. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருப்பவர்களுக்கு அவ்வாறான ஒரு வேலையை செய்ய முடியாது. அதாவது கடத்தல் வேலைகளை செய்ய முடியாது என்று நான் கூறினேன்.

எனக்கு இந்த இடத்தில்தான் சந்தேகம் எழுந்தது. அதாவது அரசாங்கத்தை அவமதிக்க எதிர்கட்சியினர் போட்ட திட்டம் என்றார்களே. இவர்கள் எம்மீது குற்றம் சுமத்தாமல் இருந்திருந்தால் அது புதுமை படக்கூடிய விடயமாகும்.

உதாரணம் ஒன்றை கூறுகிறேன். தாமரை கோபுரம் திறந்து வைக்கப்படும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால என்ன தெரிவித்தார். இதனை ஆரம்பித்தவர் பசில் ராஜபக்ஷ. அவர் இதில் 200 கோடி ரூபா மோசடி செய்துள்ளார் என கூறினார். இவ்வாறான ஒரு பாரிய திட்டத்தில் மோசடி செய்யாமல் இருந்திருந்தால் அதுதான் புதுமை. அது இல்லாமல் மோசடி செய்தார்கள் என்பதை நாம் புதுமையாக பார்க்க தேவையில்லை.

அதேபோல தான் சுவிஸ் தூதரக பணிப்பெண் கடத்தல் சம்பவம். அந்த சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் அதுதான் புதுமை என நான் கூறுகிறேன்.