நாடாளுமன்றில் இடம்பெற்ற விருந்துபசாரம்: ஜனாதிபதி கோட்டாபயவுடன் இரா.சம்பந்தன் கலந்துரையாடல்

Report Print Malar in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துரையாடியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று சபை ஒத்திவைப்பு வேளையை தொடர்ந்து சபாநாயகரால் விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போதே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Offers