எம்.பியான பின்னர் எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்ட வருண பிரியந்த லியனகே

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வருண பிரியந்த லியனகே இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்த பின்னர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துக்கொண்டார்.

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸாவின் மறைவுக்கு பின்னர் வெற்றிடமாக இருந்த இடத்துக்கே வருண பிரியந்த லியனகே நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் 2018ம் ஆண்டு பொதுஜன பெரமுன மேற்கொண்ட அரசியல் குழப்பநிலையை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.

அதேநேரம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவையும் தாம் ஏற்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

எனவே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்து தாம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதாக லியனகே அறிவித்தார்.