இனப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை! ஜனாதிபதிக்கு இரா.சம்பந்தன் அழைப்பு

Report Print Murali Murali in அரசியல்

இனப்பிரச்சினைக்கு பேச்சு நடத்துவதற்கான அழைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று பிற்பகலில் ஜனாதிபதியை சந்தித்த இரா.சம்பந்தன் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, இரா.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினரும் இணைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வை அறிவதற்கு பேச்சு நடத்துவேண்டும் என இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.