கோட்டாபயவின் அரியாசன உரையை புறக்கணித்த முன்னாள் ஜனாதிபதிகள்!

Report Print Vethu Vethu in அரசியல்

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி ஆற்றிய அரியாசன உரையை கேட்பதற்காக முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் கலந்து கொள்ளாமை குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.

சம்பிரதாயத்திற்கமைய முன்னாள் ஜனாதிபதிகள், தூதுவர்கள், நீதிபதிகள், சட்டமா அதிபர்கள் உட்பட முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய நாடாளுமன்ற அமர்வை ஆடம்பரமின்றி மிகவும் அமைதியான முறையில் நேற்று ஆரம்பித்து வைத்திருந்தார்.

அந்த நிகழ்விற்காக முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ரணசிங்க பிரேமதாஸவின் மனைவியான ஹேமா பிரேமதாஸ ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

எனினும் எவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.