சுதந்திரக் கட்சியினரை தோற்கடிக்கும் திட்டத்தில் பொதுஜன பெரமுன

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒரே கூட்டணியின் கீழ் போட்டியிட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை தோற்கடிக்கும் திட்டம் ஒன்றை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதானிகள் மாவட்ட மட்டத்தில் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

அதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என அந்த கட்சியின் பிரதேச தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச தலைவர்கள் நேரடியாக சுதந்திரக் கட்சியை விமர்சித்து வருகின்றனர் எனவும், எதிர்வரும் பொதுத் தேர்தல் வரை இந்த விமர்சனம் குறைய போவதில்லை எனவும் சுதந்திரக் கட்சியின் பிரதேச தலைவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு குறைவான வேட்புமனுக்களே கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அத்துடன் பொதுஜன பெரமுனவின் பிரச்சாரம் காரணமாக கூட்டணியின் கீழ் போட்டியிடும் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு குறைவான வாக்குகளே கிடைக்கும் எனவும் பேசப்படுகிறது.