மகிந்த முதலில் நேசிப்பது சுதந்திரக் கட்சியையே! சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் தெரிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

தான் முதலில் நேசிப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை என்பதால், அதனை வீழ்ச்சியடைய இடமளிக்க போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

மொறட்டுவையில் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகம் ஒன்றை திறந்ததாகவும், முன் கூட்டியே கூறியிருந்தால், தானும் திறப்பு விழாவுக்கு வந்திருப்பேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியதாகவும் சுமதிபால கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையே தான் முதலில் நேசிப்பதாகவும் அதனை வீழ்ச்சியடைய செய்ய வேண்டாம் எனவும், கட்சியை பிளவுப்படுத்த வேண்டாம் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாக திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.