ஐ.தே.கட்சியின் கொள்கையை பின்பற்றும் ஜனாதிபதி!

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்துள்ள கொள்கையின் அடிப்படையில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையையே முன்னெடுத்துச் செல்வதாகவும் அது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கத்தின் கொள்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்வது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் போது ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களே தன்னை விமர்சிக்கின்றனர்.

கடந்த அரசாங்கத்தின் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கைகளையே ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்வதாகவும், அதேபோல் ஹம்பாந்தோட்டை தொழில் நகரமாக மாற்ற போவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இவற்றை கடந்த அரசாங்கம் செய்யும் போது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர் எனவும் மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.