அரசியலமைப்பில் திருத்தம் தேவை! கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டுமாயின் அது குறித்து மக்களுடன் கலந்துரையாட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் அவசியம். நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு சில தேவைகள் இருக்கின்றன.

எவ்வளவு தேவைகள் இருக்கின்றன என்பதை கூற முடியாது. அது குறித்து விரிவாக கலந்துரையாட வேண்டும் எனவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.