நாடாளுமன்றத்தில் ஐ.தே.கவிற்கே பெரும்பான்மை பலம்! ஹெக்டர் அப்புஹாமி

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்த போதிலும் ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவே புதிய அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

நாத்தாண்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் எமக்கே பெரும்பான்மை பலம் இருக்கின்றது. புண்ணியத்திற்காக நாங்கள் அவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளோம்.

கோட்டாபய ராஜபக்ச மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே நாங்கள் அரசாங்கத்தை அவர்களிடம் வழங்கினோம். நினைத்து பார்க்க முடியாத அளவுக்கான வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.

இதன் காரணமாகவே 69 லட்சம் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர். 69 லட்சம் பேருக்கு அல்ல முழு நாட்டுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதாலேயே அவர்களிடம் அரசாங்கத்திடம் கையளித்தோம் என குறிப்பிட்டுள்ளார்.