அரசாங்கம் தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது! இரா.சம்பந்தன்

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் சர்வதேசமும் சர்வதேச அமைப்புகளும் இலங்கை சம்பந்தமாக உன்னிப்பாக அவதானித்து வருவதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கோ, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கோ தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிறந்துள்ள புத்தாண்டில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்க ராஜபக்ச அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டு தமிழ் மக்கள் திருப்தியடையக் கூடிய வகையில் எதுவும் நடக்கவில்லை. எனினும், தமிழ் மக்கள் இணைந்து தமது உரிமைகளுக்காக புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் பதவி வந்து இதுவரை தமிழர்களின் நலன்களுக்காக எதனையும் நிறைவேற்றவில்லை. தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை அரசாங்கம் கட்டாயம் வழங்க வேண்டும்.

முதலில் அரசாங்கம் தீர்வை முன்வைக்க வேண்டும். அத்துடன் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.