ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறும் முக்கியஸ்தர்

Report Print Varun in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அரசியல் ரீதியாக புதிய தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீங்கிவிட தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தவிடயம் குறித்து அவர் பல தரப்புகளுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகிறது.