பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை நேரில் சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்

Report Print Rusath in அரசியல்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் குறைபாடுகள், மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மாவட்டத்தில் எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பல விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.