ஜனாதிபதி தன்னை எளிமையானவர் எனக் காட்ட முயற்சி: பாலித

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று வந்த போது, இராணுவ அணி வகுப்பு உட்பட ஏற்பாடுகளை நிறுத்திய போதிலும் அதற்காக செலவுகள் ஏற்கனவே செலவிடப்பட்டு விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

தான் எளிமையானவர் என்பதை காண்பிப்பதற்காக மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படுவதை நிறுத்தினாலும் அதற்காக பீரங்கி மற்றும் படையினர் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தன்னை எளிமையானவர் என்று காட்ட முயற்சித்தாலும் செய்ய வேண்டிய அனைத்து செலவுகளும் செய்யப்பட்டு விட்டன எனவும் ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.