பதவிகளுக்காக எம்மை பிரிக்க முடியாது!! சஜித்

Report Print Varun in அரசியல்

ஜனாதிபதி தேர்தலின் போது நாங்கள் எவ்வாறு செயற்பட்டோமோ அதனை போல நான்கு மடங்கு முயற்சி செய்து ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவியமையால் ஐக்கிய தேசியக் கட்சியினர் பாரிய பிரச்சினைகளை இப்போது எதிநோக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

காலி - பத்தேகம தேர்தல் தொகுதியில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகே கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்;

கடந்த காலங்களில் எமது வரலாறை எடுத்துக்கொண்டால் பல தோல்விகளின் பின்னர் வெற்றியடைந்துள்ளோம். நாம் அனைவரும் பொறுப்புடன் பணியாற்றினால் வெற்றியின் இலக்கை நோக்கி பயணிப்பது அவ்வளவு கடினமான இருக்காது.

இப்போது எமது பொறுப்பு என்னவென்றால் கட்டாயமாக எதிர்வரும் பொது தேர்தலில் வெற்றி பெறுவதே ஆகும்.

பதவிகளை கரணம் காட்டி எம்மை பிரிக்கவோ அல்லது கட்சியை பிளவுபடுத்தவோ எவராலும் முடியாது. எந்த கட்சியை எடுத்துக் கொண்டாலும் அங்கு பல்வேறுபட்ட யோசனைகள் இருக்கும். பல்வேறுப்பட்ட கருத்துக்கள், முரண்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இருக்கும். அவை இரு ஜனநாயக நாட்டில் காணப்படும் சாதாரண விடயங்களாகும்.

நாட்டில் பல்வேறுபட்ட கருத்துக்கள் இல்லை என்றால் அங்கே சர்வாதிகார ஆட்சியே காணப்படும். இலங்கை ஒரு சர்வாதிகார நாடு அல்ல. ஐந்து விரல்களும் ஒரேமாதிரி காணப்படாது. அவை ஒன்றின் ஒன்று வித்தியாசமானது.

நாம் அனைவரும் அறிந்த விடயம்தான் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நாடாளுமன்றம் கலைக்கபட உள்ளதை. எனவே நாம் பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும்.