தனது துறைகளை இராஜாங்க அமைச்சர்களுக்கு பகிரும் பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கீழ் உள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களின் துறைகளை இராஜாங்க அமைச்சர்களுக்கு பகிரும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளது.

இதனடிப்படையில், பிரதமரின் கீழ் உள்ள அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, காமினி லொக்குகே, இந்திக அனுருத்த ஆகியோருக்கு பிரதமரின் பொறுப்பின் கீழ் இருக்கும் பல நிறுவனங்கள் பகிரப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள இரண்டு அமைச்சர்களும் பிரதமருடன் இணைந்து இராஜாங்க அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கி உள்ளனர்.

மேலும் பல அமைச்சர்கள் தமது துறைகளை இராஜாங்க அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.