மைத்திரியின் உரைக்கும் கோட்டாபயவின் உரைக்கும் வித்தியாசமில்லை: சரத் பொன்சேகா

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை உரைக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய கொள்கை உரை சமனானது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ராஜபக்ச பரம்பரை பற்றி பகுதியை தவிர இரண்டு பேரின் உரைகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. பேசிய விதத்தில் பிரதிபலன்கள் இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது.

மக்கள் எதிர்பார்க்கும் பிரதிபலன்கள் கிடைக்கும் என நம்பவில்லை. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறுகிறார்.

புலனாய்வு பிரிவுகளில் இரண்டு பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியதால் மாத்திரம் பாதுகாப்பு உறுதியாகாது எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.