சுதந்திரக் கட்சிக்குள் கருத்து மோதல்

Report Print Steephen Steephen in அரசியல்
175Shares

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பது சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு முக்கிஸ்தர்கள் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணி அமைத்தால் புதிய கூட்டணி மற்றும் புதிய சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என இவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிட உள்ளதாலும் வேறு கூட்டணியின் கீழ் போட்டியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பொதுத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மற்றைய முக்கியஸ்தர் கூறியுள்ளார். இவ்வாறு போட்டியிட்டால் மாத்திரமே வெற்றி பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாடு கட்சிக்குள் சென்றுள்ளதால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூடி இறுதி தீர்மானத்தை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.