முறிவிற்பனை மோசடியில் ரணிலுக்கும் தொடர்பு!

Report Print Ajith Ajith in அரசியல்

மத்திய வங்கியின் முறிவிற்பனை மோசடியின் பின்னணியில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் அவர் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் மத்திய வங்கியி;ன் மோசடியை மறைத்த குற்றச்சாட்டுக்கு ரணில் விக்ரமசிங்க உள்ளாகியுள்ளார்.

அத்துடன் கடந்த ஐந்து வருடங்களாக உண்மையை மறைத்த குற்றமும் அவரை சார்ந்துள்ளதாக கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் குறித்த மத்திய வங்கியின் முறிமோசடி தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் தற்போது ஆராய்வுகளை மேற்கொண்டு வருவதாக கப்ரால் தெரிவித்துள்ளார்.