பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒழிப்பு : புதிய சட்டத்தை கோரும் ஜே.வி.பி

Report Print Banu in அரசியல்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஒழிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிச தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஒழிப்பதற்கான சமீபத்திய அமைச்சரவை முடிவு குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது போலவே, அதற்கு மாற்றாக புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இது பாராட்டுக்குரிய ஒரு நடவடிக்கை ஆகும், என்று கூறியுள்ளார்.