எரிபொருள் விலை மீளாய்வு சூத்திரத்தை தொடர அரசாங்கம் முடிவு

Report Print Ajith Ajith in அரசியல்

எரிபொருள் விலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விலை மீளாய்வு சூத்திரத்தை தொடர்வது என்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

ஏற்கனவே இந்த சூத்திரத்தை அரசாங்கம் விமர்சித்து வந்தது.எனினும் அந்த சூத்திரத்தை தொடர்வது என்று திறைசேரியின் செயலாளர் எஸ் ஆர் ஆட்டிக்கல தெரிவித்துள்ளார்.

இது 2020 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வருவதாகவும், எரிபொருள் விலை சூத்திரத்தை வைத்திருப்பதன் மூலமே விலைகளை கணக்கிடமுடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

எனவே ஏற்கனவே உள்ள சூத்திரத்தை தொடர்வது என்று தாம் முடிவெடுத்துள்ளதாகவும் ஆட்டிக்கல குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே விலை மீளாய்வு சூத்திரம் தமது ஆட்சியில் நீக்கப்படும் என்று மின்சக்தி எரிபொருள் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த நவம்பர் 26ஆம் திகதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது