தவறானவர்களின் பின்னால் செயற்படும் பொலிஸார்! இராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு

Report Print Ajith Ajith in அரசியல்

அரசாங்கம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் பொலிஸார் பிழையான வழியில் செல்வதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே பொலிஸாரின் நடவடிக்கைகளில் தாம் திருப்திக்கொள்ளவில்லை என்றும் அவர் தமது டுவிட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

எத்தனை பேர் பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுடன் உள்ளனர்.பொலிஸார் அவர்களை கைதுசெய்யவில்லை. இவர்களின் பின்னால் பொலிஸாரும், சட்டமா அதிபர் திணைக்களமும் செல்லவில்லை. மாறாக பிழையான வழியில் சென்று கொண்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Latest Offers