எதனோலின் இறக்குமதி தடையால் சவால்களை எதிர்நோக்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள்!

Report Print Ajith Ajith in அரசியல்

எதனோலின் இறக்குமதி தடை செய்யப்பட்டமை காரணமாக நாட்டின் முன்னணி மதுபான நிறுவனங்கள் தமது உற்பத்தி தொடர்பில் சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதனோலின் உள்ளூர் உற்பத்திக்கு வழிவிடும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.

எனினும், எதனோலின் கேள்வி வருடம் ஒன்றுக்கு 35 மில்லியன் லீற்றர்கள் என்ற வகையில் உள்ளூரில் 15 மில்லியன் லீற்றர் எதனோலே உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எதனோல் இறக்குமதிக்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வருமானமும் கிடைத்து வருகிறது.

எனினும், இலங்கையின் மது உற்பத்தி நிறுவனங்களில் பெரும்பாலானவை முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமானவை என்ற வகையில் அதில் நான்கு நிறுவனங்கள் பல வருடங்களாக வரிகளை செலுத்தாமலேயே எதனோலை இறக்குமதி செய்து வந்தன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.