2019ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை உறுதிப்படுத்த நடவடிக்கை

Report Print Malar in அரசியல்

2019ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை எதிர்வரும் 24ஆம் திகதி உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றை கலைக்க ஜனாதிபதி கோட்டாபய நடவடிக்கை எடுப்பாராயின், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி முதல் மே மாதம் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேர்தல் இடம்பெறும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அதற்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல முடியும்.

19ஆவது அரசியலமைப்பு சீரத்திருத்திற்கமைய நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் நான்கரை வருடத்திற்கு பின்னரே ஜனாதிபதிக்கு கிடைக்க பெறும். இதன்படி, நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மார்ச் மாதம் முதலாம் திகதியே கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.