மன்னிப்பு என்ற உணர்வு இல்லாமல் மன்னிப்பு கோரும் இலங்கை!

Report Print Ajith Ajith in அரசியல்

மன்னிப்பு என்ற உணர்வு இல்லாமல் மன்னிப்பு கோருவது எவ்வாறு என்பதை இலங்கை சுவிற்சர்லாந்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

ஆங்கில செய்தித்தாள் ஒன்று தமது கட்டுரை ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் 25ஆம் திகதியன்று கொழும்பில் வைத்து சுவிற்சர்லாந்து தூதரகத்தின் பணியாளர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டதாக முறையிடப்பட்டது.

இதனையடுத்து அந்த பெண்ணை மனநிலைக் கருதி இலங்கையின் அதிகாரிகளிடம் சாட்சியம் வழங்க சுவிற்சர்லாந்து தூதரகம் தாமதித்து வந்தது.

எனினும், பின்னர் அந்த பெண்ணின் சாட்சியத்தின்படி அவர் கடத்தப்படவில்லை என்பதையும் அவர் பொய்க்கூறியதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டது.

பின்னர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் குறித்த பெண் இலங்கையின் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இதன்பின்னர் சுவிற்சர்லாந்து அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், ஒரு நாட்டின் கீர்த்தியை பாதிக்கும் வகையில் இந்த சம்பவம் அமைந்திருந்தமை தொடர்பான உணர்வு அந்த அறிக்கையில் காட்டப்பட்டிருக்கவில்லை என்றும் ஆங்கில செய்தித்தாள் தமது கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளது.