அரசாங்கத்தின் அரசியல் வேட்டை ஆரம்பம்! இதனையா மக்கள் எதிர்பார்த்தனர்?

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் அரசியல் வேட்டை ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பாக காலியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

தேவையற்ற சிறிய காரணத்திற்காக ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். ரஞ்சன் தொடர்பாக எமக்கும் பிரச்சினையுள்ளது.

கட்டுப்படுத்தாத வாய் அவருக்கு இருக்கின்றது. அது பிரச்சினையல்ல. ரஞ்சன் சமூகத்தில் நடக்கும் தவறுகளை வெளி கொண்டு வந்தார்.

போதைப் பொருள் விற்பனையாளர் பற்றிய தகவல்களை வெளியிட்டார். போதைப் பொருள் விற்பனையாளர்களை காப்பாற்றியவர்களை பற்றி பேசினார்.

இவற்றுக்கு எதிராகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 69 லட்சம் மக்கள் இதனையா எதிர்பார்த்தனர்? எனவும் மனுஷ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.